Search This Blog

Friday, 3 March 2017

Home remedy for Chest Cough for Children:

Shallots / small onion – 3 pcs
Garlic – 2 gloves
Betel leave – 1
Neam leave – 2

Sunday, 6 November 2016

வீட்டு உபயோகக் குறிப்புகள்

1.      
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

NUTRITIONAL FACTS OF FRUITS

கொய்யாப்பழம்:

·         100 கிராமில் மூன்று நாட்களுக்கான வைட்டமின் சி கிடைக்கும்.
·         வைட்டமின் ஏ, பி, இ, கே உள்ளன.
·         கால்சியம், துத்தநாகம் உள்ளன.
·         நார்ச்சத்து, மாவுச்சத்து அதிகம்.
·         பீட்டாகரோட்டின், ஐசோபீன், லூட்டீன் சத்துக்கள் நிறைந்தது.
·         பொட்டாசியம் சத்து நிறைந்தது.
·         ரத்தசோகை குணமாகும்.
·         சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
·         மலச்சிக்கல் நீங்கும்.
·         செங்காயாகச் சாப்பிடுவது நல்லது.

பப்பாளி:

·         வைட்டமின் ஏ, பி6, இ இருக்கின்றன.
·         நார்ச்சத்து அதிகம். கொழுப்பு இல்லை.
·         சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
·         புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
·         ஒரு நாளின் வைட்டமின் சி தேவையில் 100 கிராம் பூர்த்தியாகும்.
·         இளமைப் பொலிவு கிடைக்கும்.
·         ஈறுகளை வலுவாக்கி, பல் நோய்களை குணப்படுத்தும்.
·         பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் இருக்கின்றன.
·         மலச்சிக்கல் நீக்கும்.
·         உச்சி முதல் உள்ளங்கால் வரை தேவையான சத்துக்களை அள்ளித்தரும்.

பேரிக்காய்:

·         சிறுநீரகக் கோளாறுகளைச் சீர் செய்யும்.
·         உடல் எடையைக் குறைக்கும்.
·         சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
·         நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
·         பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
·         வைட்டமின் ஏ, பி, சி, இ, கே இருக்கின்றன.
·         ஆன்டியாக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
·         எலும்புகளை வலுவாக்கும்.
·         ப்ராஸ்டேட் கோளாறுகளைத் தடுக்கும்.
·         இயற்கை மலமிலக்கியாகச் செயல்படும்.

சீதாப்பழம்:

·         மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.
·         வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருக்கிறது.
·         வைட்டமின் சி, இ சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன.
·         உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளது.
·         கால்சியம், இரும்பு, தாமிரம் முதலான தாது உப்புகள் இருக்கின்றன.
·         ஆரம்ப நிலை காசநோயைக் கட்டுப்படுத்தும்.
·         உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.
·         எலும்புகள், பற்கள் உறுதியாகும்.
·         நீர்ச்சத்து அதிகம், உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
·         இதயத்தைப் பலமாக்கும்.

திராட்சை:

·         குடல் புற்றுநோய், பிராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.
·         இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைத் தடுக்கும்.
·         பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
·         வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைத் தடுக்கும்.
·         இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புகள் நிறைந்தது.
·         வைட்டமின் ஏ, பி6, கே இருக்கின்றன.
·         சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.
·         நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
·         ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது.
·         செரிமானத்தைச் சீராக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:

·         சருமத்திற்கு பொலிவு தந்து, முதுமையைத் தடுக்கும்.
·         ஒருநாள் தேவையில் 98% வைட்டமின் சி, 100கிராம் ஸ்ட்ராபெர்ரியில் உள்ளது.
·         வைட்டமின் சி நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
·         கிருமித் தொற்றைத் தடுக்கிறது.
·         நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான செயல்திறனை மேம்படுத்துகிறது.
·         கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
·         இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, இதயத்தின் செயல்திறன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
·         குறைந்த கலோரி கொண்டது. (100 கிராமில் 32 கலோரி)
·         இதில் உள்ள ஆன்தோசயனின் மற்றும் எலாஜிக் அமிலம் புற்றுநோயைத் தடுக்கின்றன.

Tuesday, 2 August 2016

பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட


உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருதுவாக இருக்கும்.

வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின் குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும் தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும். பொடுகு நீங்கும்.


கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலையில் தேய்த்து வர நரைமுடி குறையும்.

Sunday, 17 July 2016

பொலிவான சருமத்திற்கு!


·         ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தடவினால், உள்ளங்கைகளின் கடினத்தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

·         தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

·         நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி, சிறிது நேரம் கழித்து நகத்தினை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும்.

·         கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து எலுமிச்சை சாறை தேய்த்து, சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.

·         தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

·         ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி, ½ மணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

·         தேங்காய்ப்பாலுடன் 1டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

·         சந்தனத்தை பன்னீர் விட்டு அரைத்துப் பூசினால், வேர்க்குரு நீங்கும்.


Thursday, 14 July 2016

Beautiful Face - Tips



முகத்தினை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் இதோ உங்களுக்க்காக!

       சந்தனம், முல்தானிமெட்டி கலந்து முகத்தில் பூசி வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
·         கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

·         பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

·         2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தினசரி செய்து வந்தால், வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.

·         பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி, கண்களை சுற்றி வைக்க, கருவளையம் மறையும்.

·         பப்பாளி பழத்தினை அரைத்து, முகத்தில் தொடர்ந்து பூசி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

·         புளித்த மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.

·         ஆரஞ்சு பழத்தினை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

·         முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றைத் தடவ வேண்டும்.

·         வேப்பிலை, புதினா, மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காய வைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.

·         ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

·         முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

·         பழுத்த வாழைப்பழத்தினை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

·         பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால், சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

·         தேங்காய்ப்பாலுடன் 1டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

·         தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

·         உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசினால் தோலின் நிறம் பொலிவு பெறும்.



Thursday, 19 May 2016

தேனின் மருத்துவ பலன்கள்


Hello everyone,

There are lots of healthy and nutritional facts in the vegetables and spices we are using every day. In this blog, i'm planning to share home remedies for health problems and beauty tips.

Lets start with the benefits of Honey!


  • பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.
  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
  • மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உண்டாகும்.
  • எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இன்சுலின் சுரக்கும்.
  • ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட  நல்ல தூக்கம் வரும். 
  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும்.
  • தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிடகுடல் புண், வாய்ப்புண் ஆறும்.
  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடபித்தம் தீரும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த சோகை போகும்.
  • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Wednesday, 17 February 2016

Samai Egg Fried Rice


Nowadays people are becoming more n more health conscious & started looking for some better alternatives for rice and wheat to reduce its daily consumption.For those people, millets are really useful.

Samai / little millet is a traditional food item which has more nutritious values (Fiber, calcium, minerals and iron) when compared with rice and wheat. I have seen this recipe in one of the TV channel. I tried it immediately as I had all the ingredients in home. It tastes good and my son loves to eat it.

Ingredients:

Samai / little millet - 100 gms
Oil / ghee - as required for saute
Cinnamon - few
Green chilly - 2
Garlic - 5 to 8 cloves
Onion - 1 
Egg - 2
Carrot - 1
Beans - 5
Capsicum - 
Salt - as required

Make fine powder:
Fennel seed - 1 tspn
Roasted gram - 3tspn
Pepper - 2tspn
 
How to make:
Step 1: Boil samai and keep aside. (1 cup samai, 2-3cups water) Note that samai cooks very fast. So dont keep more than 6 to 7 minutes.
Step 2: Pour oil / ghee in kadai and add cinnamon, garlic, green chilly and roast it.
Step 3: Finely chop the vegetables (carrot, capsicum, onion, beans etc as u wish)
Step 4: Add onion and saute it for few seconds. Then add all other vegetables and saute it.
Step 5: Let the vegetables cook for some time and then add egg and saute.
Step 6: Once the egg is cooked (raw smell should go), add the powder (Fennel, roasted gram and pepper).
Step 7: Now add the cooked samai and mix well.
Step 8: Cover with lid and cook for 3 minutes.
Step 9: Garnish with corriander leaves and serve hot.

Note:
=> 100gms samai will be enough for two people.
=> You can replace samai with other millets like kudhirai vali, varagu, thinai etc.

Translate