Search This Blog

Thursday, 14 July 2016

Beautiful Face - Tips



முகத்தினை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் இதோ உங்களுக்க்காக!

       சந்தனம், முல்தானிமெட்டி கலந்து முகத்தில் பூசி வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
·         கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

·         பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

·         2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தினசரி செய்து வந்தால், வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.

·         பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி, கண்களை சுற்றி வைக்க, கருவளையம் மறையும்.

·         பப்பாளி பழத்தினை அரைத்து, முகத்தில் தொடர்ந்து பூசி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

·         புளித்த மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.

·         ஆரஞ்சு பழத்தினை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

·         முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றைத் தடவ வேண்டும்.

·         வேப்பிலை, புதினா, மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காய வைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.

·         ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

·         முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

·         பழுத்த வாழைப்பழத்தினை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

·         பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால், சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

·         தேங்காய்ப்பாலுடன் 1டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

·         தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

·         உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசினால் தோலின் நிறம் பொலிவு பெறும்.



No comments:

Post a Comment

Translate