Search This Blog

Sunday, 17 July 2016

பொலிவான சருமத்திற்கு!


·         ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தடவினால், உள்ளங்கைகளின் கடினத்தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

·         தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

·         நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி, சிறிது நேரம் கழித்து நகத்தினை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும்.

·         கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து எலுமிச்சை சாறை தேய்த்து, சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.

·         தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

·         ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி, ½ மணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

·         தேங்காய்ப்பாலுடன் 1டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

·         சந்தனத்தை பன்னீர் விட்டு அரைத்துப் பூசினால், வேர்க்குரு நீங்கும்.


No comments:

Post a Comment

Translate