Search This Blog

Sunday, 6 November 2016

வீட்டு உபயோகக் குறிப்புகள்

1.      
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

NUTRITIONAL FACTS OF FRUITS

கொய்யாப்பழம்:

·         100 கிராமில் மூன்று நாட்களுக்கான வைட்டமின் சி கிடைக்கும்.
·         வைட்டமின் ஏ, பி, இ, கே உள்ளன.
·         கால்சியம், துத்தநாகம் உள்ளன.
·         நார்ச்சத்து, மாவுச்சத்து அதிகம்.
·         பீட்டாகரோட்டின், ஐசோபீன், லூட்டீன் சத்துக்கள் நிறைந்தது.
·         பொட்டாசியம் சத்து நிறைந்தது.
·         ரத்தசோகை குணமாகும்.
·         சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
·         மலச்சிக்கல் நீங்கும்.
·         செங்காயாகச் சாப்பிடுவது நல்லது.

பப்பாளி:

·         வைட்டமின் ஏ, பி6, இ இருக்கின்றன.
·         நார்ச்சத்து அதிகம். கொழுப்பு இல்லை.
·         சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
·         புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
·         ஒரு நாளின் வைட்டமின் சி தேவையில் 100 கிராம் பூர்த்தியாகும்.
·         இளமைப் பொலிவு கிடைக்கும்.
·         ஈறுகளை வலுவாக்கி, பல் நோய்களை குணப்படுத்தும்.
·         பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் இருக்கின்றன.
·         மலச்சிக்கல் நீக்கும்.
·         உச்சி முதல் உள்ளங்கால் வரை தேவையான சத்துக்களை அள்ளித்தரும்.

பேரிக்காய்:

·         சிறுநீரகக் கோளாறுகளைச் சீர் செய்யும்.
·         உடல் எடையைக் குறைக்கும்.
·         சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
·         நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
·         பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
·         வைட்டமின் ஏ, பி, சி, இ, கே இருக்கின்றன.
·         ஆன்டியாக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
·         எலும்புகளை வலுவாக்கும்.
·         ப்ராஸ்டேட் கோளாறுகளைத் தடுக்கும்.
·         இயற்கை மலமிலக்கியாகச் செயல்படும்.

சீதாப்பழம்:

·         மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.
·         வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருக்கிறது.
·         வைட்டமின் சி, இ சத்துக்கள் ஓரளவு இருக்கின்றன.
·         உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளது.
·         கால்சியம், இரும்பு, தாமிரம் முதலான தாது உப்புகள் இருக்கின்றன.
·         ஆரம்ப நிலை காசநோயைக் கட்டுப்படுத்தும்.
·         உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.
·         எலும்புகள், பற்கள் உறுதியாகும்.
·         நீர்ச்சத்து அதிகம், உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
·         இதயத்தைப் பலமாக்கும்.

திராட்சை:

·         குடல் புற்றுநோய், பிராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.
·         இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைத் தடுக்கும்.
·         பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
·         வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைத் தடுக்கும்.
·         இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புகள் நிறைந்தது.
·         வைட்டமின் ஏ, பி6, கே இருக்கின்றன.
·         சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.
·         நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
·         ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது.
·         செரிமானத்தைச் சீராக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:

·         சருமத்திற்கு பொலிவு தந்து, முதுமையைத் தடுக்கும்.
·         ஒருநாள் தேவையில் 98% வைட்டமின் சி, 100கிராம் ஸ்ட்ராபெர்ரியில் உள்ளது.
·         வைட்டமின் சி நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
·         கிருமித் தொற்றைத் தடுக்கிறது.
·         நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான செயல்திறனை மேம்படுத்துகிறது.
·         கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
·         இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, இதயத்தின் செயல்திறன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
·         குறைந்த கலோரி கொண்டது. (100 கிராமில் 32 கலோரி)
·         இதில் உள்ள ஆன்தோசயனின் மற்றும் எலாஜிக் அமிலம் புற்றுநோயைத் தடுக்கின்றன.

Translate